சிக்கிம் மேக வெடிப்பு: தீஸ்டா ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்
சிக்கிம் மாநிலத்தின் டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 23 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள தீஸ்டா ஆற்றில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில இராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
காணாமல்போன வீரர்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ராணுவ வாகனங்கள் சிங்டாம் அருகே பர்டாங்கில் நிறுத்தப்பட்டன. அப்போது கீழணையில் 15 முதல் 20 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது.
சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக புதன்கிழமை காலை குறைந்தது 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயினர். சில இராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தேடுதல் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ராணுவ வாகனங்கள் சிங்டாம் அருகே பர்டாங்கில் நிறுத்தப்பட்டன. கீழணையில் 15 முதல் 20 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது.
வடகிழக்கு மாநிலத்தின் சிங்டாமில் மேகம் வெடிப்பு காரணமாக திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள நிலைமையை முதல்வர் பிரேம் சிக் தமாங் நேரில் பார்வையிட்டுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை