ஜார்கண்ட் மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை தனது காதலன் கண் முன்னே 20 பேர் சேர்ந்து 3 மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஜார்கண்ட் மாநிலம் தும்கா நகர் அருகில் டிஜி என்ற இடத்தில் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. அந்த பல்கலை கழகத்தில் படித்து வந்த பழங்குடியினத்தை சேர்ந்த மாணவி ஒருவர் வேறு ஜாதியை கொண்ட தனது காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து நீ எதற்கு பழங்குடியின பெண்ணை காதலிக்கிறாய் என கூறி தகராறு செய்தனர். 

மேலும் காதலனை அடித்து மரத்தில் கட்டிப்போட்டனர். தொடர்ந்து அந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி காதலன் முன்பு அந்த பெண்ணை 6 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். 

பின்னர் நண்பர்களை போன் போட்டு வரவழைத்து 20 பேர் வரை அந்த பெண்ணை 3 மணி நேரம் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினர். 

இதுகுறித்து அந்த பெண்ணும் அவரது காதலனும் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.