Asianet News TamilAsianet News Tamil

150 அடி ஆழ்துளைக் கிணறு...4 நாட்களாக உயிருக்குப் போராடும் 2 வயது சிறுவன்...

ஆழ்துளைக் கிணறு ஒன்றில் தவறி விழுந்து இரண்டே வயதான சிறுவன் நான்கு நாட்களாக உயிருக்குப் போராடிவருகிறான். அச்சிறுவன் உயிரோடு மீட்கப்படவேண்டும் என்று நாடு முழுவதும் வலைதளங்கள் மூலம் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
 

2 year old boy stuck in borewell
Author
Panjab, First Published Jun 9, 2019, 3:45 PM IST

ஆழ்துளைக் கிணறு ஒன்றில் தவறி விழுந்து இரண்டே வயதான சிறுவன் நான்கு நாட்களாக உயிருக்குப் போராடிவருகிறான். அச்சிறுவன் உயிரோடு மீட்கப்படவேண்டும் என்று நாடு முழுவதும் வலைதளங்கள் மூலம் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுவருகின்றனர்.2 year old boy stuck in borewell

பஞ்சாபில்  இரண்டு வயதே ஆன சிருவன்  150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து விட்டான். பஞ்சாப் மாநிலம் சங்க்ரர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த குழந்தை 110 அடி தூரத்தில் மாட்டியிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால் ஆழ்துளைக் கிணற்றின் அகலம் 9 இஞ்ச் மட்டுமே உள்ளது.

குழந்தை சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன் கிடைக்குமாறு மருத்துவக் குழு ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ந்து கேமரா மூலமாக குழந்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரும் உள்ளார் எனத்தெரிய வந்துள்ளது.மீட்புக் குழுவினர் ஆழ்துளைக் கிணற்றுக் கீழ்  அருகில் மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.மீட்புக் குழுவினருடன் தேசிய பேரிடர் மேலாண்மையும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். உள்ளே கயிறினை போட்டு குழந்தையை தூக்க  முயற்சித்தும் பலன் இல்லை. இந்த ஆழ்துளைக் கிணறு கடந்த 7 ஆண்டுகளாக கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.2 year old boy stuck in borewell

அச்சிறுவன் உயிருடன் மீட்க்கப்படும் சாத்தியம் குறித்துப் பேசிய அரசு அதிகாரி ஒருவர்,” பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி சிறுவனை நெருங்க இன்னும் சுமார் பத்து அடி தூரமே உள்ளது. சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள சிறு வீக்கங்களை அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்துள்ளோம். மேலும் கேமரா மூலமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிறுவன் மீட்கப்பட்டவுடன் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சும் தயாராக உள்ளது’என்று குறிப்பிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios