2 teachers cut 25 students hair
மும்பை தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 25 பேர் விதிமுறையை கடைபிடிக்காமல் முடிவளர்த்ததற்காக அவர்களின் தலைமுடியை கட்டாயமாக கத்தரித்ததாக பள்ளி இயக்குநர், உடற்பயிற்சி ஆசிரியர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை புறநகர், விக்ரோலி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் குட்டையாக முடி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பள்ளி விதியாக உள்ளது.
ஆனால், இந்த விதிமுறையின்படி, 25 மாணவர்கள் குட்டையாக முடிவெட்டிக்கொண்டு வரவில்ைல. இதையடுத்து, அந்த 25 மாணவர்களின் தலைமுடியையும் பள்ளிநிர்வாகமே கத்தரிக்கோலால் வெட்டியது.
இந்நிலையில் இதற்கு கட்டுப்படாத 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 25 மாணவர்களை தண்டிக்கும் வகையில் அவர்களின் தலைமுடி வெள்ளிக்கிழமை கட்டாயமாக கத்தரிக்கப்பட்டது. இதில் 2 மாணவர்களுக்கு கத்தரிக்கோல் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி இயக்குநர் கணேஷ் பட்டா (40), உடற்பயிற்சி ஆசிரியர் மிலிந்த் ஜாங்கே (33), அலுவலக உதவியாளர் துஷார்கோர் (32) ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் பிரிவு 324, 335, 34, 75 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
