லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் உள்ள குப்பை ஸ்கிராப் டீலர் கடைக்குள் சந்தேகத்திற்கிடமான மர்ம பொருள் வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் காயமடைந்துள்ளனர். முதலில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.
இந்த வெடிப்புக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. மர்ம பொருள் வெடித்ததாக மட்டுமே அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். அந்த பொருள் என்னவென்ற விவரம் தெரியவரவில்லை.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, திராஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு ஆய்வு நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பிறகே மேலதிக தகவல்கள் தெரியவரும்.
மாணவர்கள் தற்கொலையை தடுக்க சீலிங் ஃபேனில் நூதன சாதனம்: மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
கார்கில் மாவட்ட ஆணையர் ஸ்ரீகாந்த் பாலாசாகேப், மருத்துவமனைக்கு நேரில் சென்று படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்படுத்தித் தருமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
