செங்கோட்டையில் கொடி ஏற்றாத 2 பிரதமர்கள்...!

இந்தியா இதுவரை 14 பிரதமர்களை கண்டு விட்ட நிலையில், இவர்களில் யார் அதிக முறை செங்கோட்டையில் கோடி ஏற்றி  உள்ளனர். யாருக்கு கொடி ஏற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. யாரெல்லாம் மிக குறைந்த அளவில் கொடி ஏற்றி உள்ளனர் என்பதை பார்க்கலாம். 

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் இன்று வரை 72 ஆண்டுகளில் 14 பிரதமர்கள் பதவியில் இருந்துள்ளனர் 

14 பிரதமர்கள்

1. ஜவஹர்லால் நேரு
குல்சாரி லால் நந்தா (பொறுப்பு)
2. லால் பகதூர் சாஸ்திரி
3. இந்திரா காந்தி
4. மொர்ஜி தேசாய்
5. சரண் சிங்
6.ராஜீவ் காந்தி
7. வி.பி. சிங்
8. சந்திரசேகர்
9. பி.வி. நரசிம்மராவ்
10. அடல்பிகாரி வாஜ்பாய்
11. தேவெகௌடா
12. ஐ.கே. குஜ்ரால்
13. மன்மோகன் சிங்
14. நரேந்திர மோடி

பிரதமர்களின் வரிசையில் அதிக முறை செங்கோட்டையில்  கொடி ஏற்றிவர் நேரு அவர்களே. இவர் 17 முறை கொடி ஏற்றி  உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்த படியாக,16 முறை கொடியேற்றி இரண்டாவது இடத்தில் இந்திரா காந்தி உள்ளார்.

1 முறை மட்டுமே  கொடி ஏற்றியவர்கள் 

சரண் சிங், வி.பி. சிங், தேவெகௌடா, ஐ.கே. குஜ்ரால்

ஒரு முறை கூட கொடி எற்றாதவர்கள்

குல்சாரிலால் நந்தா மற்றும் சந்திர சேகர் ஆகிய இருவரும் ஒருமுறை கூட கொடி ஏற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் 

குல்சாரிலால் 1964 ஆம் ஆண்டு மே 27 முதல் ஜூன் 9 வரை 13 நாட்களுக்கு மட்டுமே பொறுப்பு பிரதமராக இருந்ததே...சந்திரசேகர், 1990 ஆம் ஆண்டு நவம்பர் 10 முதல் 1991ஆம் ஆண்டு ஜூன் 21 வரை 223 நாட்கள் பிரதமராக இருந்தார்.

குல்சாரிலால் நந்தா பொறுப்பு பிரதமர் பதவி மட்டுமே இருந்ததாலும், சந்திரசேகர் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்ததாலும், பிரதமராக இருந்தும் செங்கோட்டையில் கொடி ஏற்ற அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.