2 percentage DA hike for Central Government employees - approved
மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்கள், 58 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்த அகவிலைப்படி 2017, ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏறக்குறைய ஒரு கோடிக்கும் மேலான பணியாளர்கள் பயன்பெற உள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு என்பது நாட்டில் ஏற்படும் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதற்கு முன் கடந்த ஆண்டு 6 சதவீதம் உயர்த்தப்பட்டு 125 சதவீதமாக அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது. 7-வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டதையடுத்து, அடிப்படை ஊதியத்தோடு, அகவிலைப்படி இணைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜூலை முதல்தேதியை முன்தேதியிட்டு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தியது. இப்போது மேலும் 2 சதவீதம் உயர்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
