Asianet News TamilAsianet News Tamil

நேரடி நெல் கொள்முதல்.. 18.17 லட்சம் விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்த மத்திய அரசு..!

2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் முந்தைய ஆண்டைப்போலவே குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்யும் நடைமுறை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கேரளா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் 30-11-2021 வரை 290.98 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

18.17 Lakh farmers have been benefitted  with MSP value
Author
Delhi, First Published Dec 2, 2021, 3:30 PM IST

2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் ரூ.57,032.03 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதார விலையுடன் சுமார் 18.17 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் முந்தைய ஆண்டைப்போலவே குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்யும் நடைமுறை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கேரளா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் 30-11-2021 வரை 290.98 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

18.17 Lakh farmers have been benefitted  with MSP value

இதுவரை ரூ.57,032.03 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சுமார் 18.17 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக பஞ்சாப்பில் இருந்து 1,86,85,532 மெட்ரிக்டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில்  2021-22 காரீப் சந்தைப்பருவத்தில் 01.12.2021 நிலவரப்படி 5,27,561 மெட்ரிக்டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1,034.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 71,311 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios