போலீசாரால் கைது செய்யப்பட்ட திருடனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் காவல்ர்கள் உட்பட 17 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

 

பஞ்சப் மாநிலத்தில் 130 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் போலீசார் பிடித்த திருடர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 காவலர்கள் உட்பட 30 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். காவல்துறையிடம் சிக்கிய திருடர்கள் கடந்த 5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வாகன திருட்டில் ஈடுபட்ட 25 வயதான சவுராவ் செஹாலுக்கு இருமலும், காய்ச்சலும் இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதில் திருடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் உட்பட அனைவரும் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சவுராவ் நவ்ஜோத் சிங் கூட்டாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டதால் அவனை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.