Asianet News TamilAsianet News Tamil

15 ஆவது நிதி ஆணைய பரிந்துரைகள் நாட்டை பிளவு படுத்தும் ! பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை !

15th finance commission.allocate finence in the basis of population
15th finance commission.allocate finence in the basis of population
Author
First Published Feb 17, 2018, 10:48 AM IST


மக்கள் தொகை வளர்ச்சியை கணக்கிட்டு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யலாம் என, 15வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் தென் இந்தியா- வட இந்தியா என ஜனநாயக ரீதியில் இந்திய மக்களை பிளவுபடுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாநிலங்களுக்கு இடையேயான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆராய. என்.கே. சிங் தலைமையில் 15வது நிதி ஆணையம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த ஆய்வு என்பது சலிப்படையச் செய்யும ஒரு பணியாக இருந்தாலும் ஒரு சிலர் இதில ஆர்வமாக உள்ளனர்.

அந்த வகையில் கே.என்.சிங் தலைமையிலான  குழு இந்த ஆய்வை  திட்டமிட்டு நடத்தியது. பொதுவாக நிதி கமிஷன் விஷயத்தில் இந்திய பங்குகளின்  எதிர்காலம்  அதன் முடிவை அடிப்படையாகக் கொண்டு அமையும்.

மத்திய அரசு வசூலிக்கும் வரிவருவாயை மாநிலங்களுக்கு இடையே பங்கிட்டுக் கொடுப்பது தொடர்பாக இந்தக் குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி, அதனடிப்படையில் பரிந்துரைகளை அளித்துள்ளது.

அதன்படி மக்கள் தொகை வளர்ச்சி அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யலாம் என்று பரிந்துரை செய்துள்ளது

ஏற்கனவே தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விஷயத்தில் 13 ஆவது நிதி ஆணைய ஒதுக்கீட்டு விகிதத்துடன் ஒப்பிடும்போது, 14 ஆவது நிதி ஆணையம், 19 சதவீதம் குறைத்து ஒதுக்கீடு இருந்தது. இதனால்  தமிழகத்துக்கு கிட்டத்தட்ட 6000 கோடி ரூபாய்  இழப்பு என கூறப்படுகிறது.

இந்த ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக தமிழகம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 14வது நிதி ஆணைய ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு 19% வரை மத்திய அரசின் நிதியுதவி குறைக்கப்பட்ட நிலையில், 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையால், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதி மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது மக்கள் தொகை தவிர மற்ற அனைத்து காரணிகளுக்கும் ஒதுக்கீடு நிலையானதாக இருந்தால், 13 ஆவது நிதி கமிஷன் ஒதுக்கீட்டு விகிதத்துடன் ஒப்பிடுகையில் 70%  அளவுக்கு இழப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

Change in Weights from 13th to 14th Finance Commission Allocation Ratios (as a %) 

Tamil Nadu

-19.04

Bihar

-11.47

Assam

-8.74

Uttar Pradesh

-8.73

Himachal Pradesh

-8.71

Rajasthan

-6.12

Uttarakhand

-6.07

Odisha

-2.87

Andhra Pradesh (United)

-2.81

West Benga;

0.83

Gujarat

1.41

Haryana

3.44

Madhya Pradesh

6.01

Maharashtra

6.19

Kerala

6.79

Karnataka

8.9

Jharkhand

12.03

Punjab

13.53

Jammu Kashmir

19.54

Chhattisgarh

24.7

Tripura

25.64

Manipur

36.81

Goa

இந்திய அளவில் மிகக் குறைவான அளவு மக்கள் தொகை வளர்ச்சி உள்ள மாநிலங்களாக தமிழகமும், கேரளாவும் திகழ்கின்றன.

1971 க்கும் 2011 க்கும் இடையே மக்கள் தொகையைகணக்கெடுக்குப் பார்த்தால் மற்ற மாநிலங்களைவிட மக்கள் தொகை குறைந்த அளவே உயர்ந்துள்ளது.

Percentage of Population Under 15 Years of Age

Kerala

25.4

Tamil Nadu

26.6

Himachal Pradesh

29.3

Punjab

29.6

Maharashtra

30.6

Karnataka

30.9

Gujarat

31.6

West Bengal

31.9

Jammu Kashmir

32

Odisha

32.1

Haryana

34.7

Assam

34.9

Chhattisgarh

35.6

Madhya Pradesh

37.3

Rajasthan

38.9

Jharkhand

39.5

Uttar Pradesh

42.3

Bihar*

43.8

 

குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக இந்த 2 மாநிலங்களிலும் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக மக்கள் தொகை வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் கட்டுப்படுத்தப்பட்டதே இதற்கு காரணம். 

ஆனால், தற்போது மக்கள் தொகை வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டை மேற்கொள்ளலாம் என N.K.சிங் தலைமையில் 15வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது தமிழகத்திற்கு மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் தெற்கு, வடக்கு என இந்தியாவையை பிளவுபடுத்தக் கூடிய ஒரு ஒரு நிலை உருவாகலாம் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எனவே மக்கள் தொகை  வளர்ச்சி அல்லாது, மாநிலத்தின் மற்ற காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இல்லையென்றால் தமிழகமும், கேரளாவும் மத்திய அரசின்  நிதியை போதிய அளவு பெற முடியாலேயே போய்விடும் என எச்சரிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios