ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று மதியம் 1 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளதாதகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

உதம்பூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

குண்டு வெடிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று மதியம் 1 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளதாதகவும், 15 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

போலீஸ் விசாரணை

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகள் செயலா என்பது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்:-குண்டுவெடிப்புக்கான சரியான காரணம் குறித்து கண்டறியப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.