Asianet News TamilAsianet News Tamil

ஆந்திராவில் மருந்து நிறுவன வெடி விபத்தில் 15 பேர் பலி; 40க்கும் மேற்பட்டோர் காயம்

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளியில் உள்ள எசியன்டியா என்ற மருந்து நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

15 dead in explosion at Andhra Pradesh pharma unit sgb
Author
First Published Aug 21, 2024, 10:35 PM IST | Last Updated Aug 21, 2024, 10:47 PM IST

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளியில் உள்ள எசியன்டியா என்ற மருந்து நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மதிய உணவு இடைவெளியின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் விபத்து நடந்ததை பலர் கவனிக்கவில்லை. அந்த இடத்தில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் வளாகத்திற்குள் விரைந்தது. விரைவில் அந்த இடத்தைச் சுற்றிலும் சாம்பல் புகை சூழ்ந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதுபற்றி அனகாப்பள்ளி காவல் கண்காணிப்பாளர் தீபிகா பாட்டீல் கூறுகையில், அணுஉலையில் வெடிப்பு நிகழ்ந்ததாகவும், விபத்துக்கான காரணம் என்ன என்று இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஜியோவை அடிச்சுத் தூக்கும் ஏர்டெல் பேமிலி பேக்! ஒரே ரீசார்ஜில் 4 பேருக்கு அன்லிமிட்டட் பலன்கள்!!

“இந்த தொழிற்சாலை இரண்டு ஷிப்டுகளில் 381 ஊழியர்களுடன் செயல்படுகிறது. மதிய உணவு இடைவேளையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எனவே, ஊழியர்கள் வருகை குறைவாகவே இருந்தது" என அனகாப்பள்ளி மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணன் கூறியுள்ளார்.

மருந்து பொருட்கள் உற்பத்தியாளரான எசியன்டியா அட்வான்ஸ்டு சையின்சஸ் (Escientia Advanced Sciences) அச்சுதபுரம் கிளஸ்டரில் ஆந்திர பிரதேச தொழில்துறை உள்கட்டமைப்பு கழகத்தின் (APIIC) சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். "இந்த விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவருபவர்களைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ நாரா லோகேஷ் கூறியுள்ளார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு அனைத்து வழிகளிலும் ஆதரவளிக்கும் என்றும் நாரா லோகேஷ் உறுதி அளித்துள்ளார்.

ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் பெண்கள்! மதுபோதை பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் எது?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios