Asianet News TamilAsianet News Tamil

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்... போராட்டம் வெடிப்பதால் உச்சநீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு..!

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை அணுகிய விதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால் உச்சநீதிமன்றத்தை சுற்றி 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

144 banned order by the Supreme Court
Author
India, First Published May 7, 2019, 12:05 PM IST

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை அணுகிய விதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால் உச்சநீதிமன்றத்தை சுற்றி 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

144 banned order by the Supreme Court

ரஞ்சன் கோகாய் மீது அவருடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய 35 வயதாகும் பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். இந்நிலையில் 3 நீதிபதிகள் கொண்ட குழுவினர் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில் இந்த புகாரை அணுகிய விதத்திற்கு எதிப்புத் தெரிவித்து வழக்கறிஞர்களும், பெண் உரிமை ஆர்வலர்களும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை சுற்றிலும் 114 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

ரஞ்சன் கோகாய் மீது அவருடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய 35 வயதாகும் பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். 2014ம் ஆண்டு மே மாதம் முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் வரை, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற இளநிலை உதவியாளராக பணியாற்றிய அந்தப்பெண் அக்டோபர் 2016 முதல் அக்டோபர் 2018 வரை இரண்டு ஆண்டுகள் கோகாயின் நீதிமன்ற அறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர்.144 banned order by the Supreme Court
 
உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு, அந்த பெண்  ஒரு பிரமாணப் பத்திரத்தை கடிதமாக அனுப்பினார். ரஞ்சன் கோகாய் வீட்டில் 2018ம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11ம் தேதிகளில் அவர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தகவல் இடம் பெற்றிருந்தது. 

அந்த கடிதம் தொடர்பான செய்தி  சில ஊடகங்களில் வெளியானது. இது தொடர்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு இதை விசாரித்தது.144 banned order by the Supreme Court

இதையடுத்து, தன் மீதான பாலியல் புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்திருந்தார் ரஞ்சன் கோகாய்.  நீதிபதி பாப்டே தலைமையிலான இந்த குழுவில் இந்திராபானர்ஜி, இந்து  மல்கோத்ரா இடம்பெற்றிருந்தனர். உச்சநீதிமன்றத்தில் இந்த உள்விசாரணைக்குழு நடத்திய விசாரணையின் விவரங்கள் பொதுவெளியில் வெளியாகாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விசாரணையில்  போதிய ஆதாரங்கள் இல்லை என புகார் மனுவை தள்ளுபடி செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.   

Follow Us:
Download App:
  • android
  • ios