Asianet News TamilAsianet News Tamil

பொதுத்தேர்வு எழுத சென்ற 12ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு திடீர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு.. கதறி துடித்த பெற்றோர்

மாணவர் யெகொல்லு  வெங்கட சதீஷ் (17). இவர் கூடூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நேற்றைய தினம் ஆங்கிலத் தேர்வை எழுதுவதற்காக மாணவர் பள்ளிக்கு வந்துள்ளார்.

12th class student dies of cardiac arrest outside exam centre
Author
Andhra Pradesh, First Published May 12, 2022, 7:45 AM IST

திருப்பதியில் 12ம் வகுப்பு தேர்வு எழுத சென்ற யெகொல்லு வெங்கட சதீஷ் என்ற மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் மாணவர் யெகொல்லு  வெங்கட சதீஷ் (17). இவர் கூடூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நேற்று முன்தினம் ஆங்கிலத் தேர்வை எழுதுவதற்காக மாணவர் பள்ளிக்கு வந்துள்ளார்.

12th class student dies of cardiac arrest outside exam centre

தேர்வு மையத்துக்கு அவர் வந்தபோது, அந்த வளாகத்தில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது மாணவர் யெகொல்லு வெங்கட சதீஷ்க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு இருந்த காவலர்கள் உடனே ஆம்புலன்ஸூக்கு சேவைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வர தாமதமாகவே, போலீசாரே மாணவன் சதீஷை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

12th class student dies of cardiac arrest outside exam centre

அங்கு சதீஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அப்போது தங்கள் மகன் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து அலறி துடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 17 வயது பள்ளி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- தாலியை இன்னும் 12 மணி நேரத்தில் நீயே கழட்டி கொடுத்துவிடு..காதல் மனைவிக்கு வீடியோ அனுப்பிவிட்டு காவலர் தற்கொலை

Follow Us:
Download App:
  • android
  • ios