Asianet News TamilAsianet News Tamil

பெங்களூரு புறநகரில் 112 அடி ஆதியோகி சிலையை ஜனவரி 15ல் திறந்துவைக்கிறார் இந்திய துணை ஜனாதிபதி..!

பெங்களூரு புறநகர்ப்பகுதியான சிக்கபல்லாபுராவில் அமைந்துள்ள ஈஷா மையத்தில் 112 அடி ஆதியோகி சிலையை ஜனவரி 15 பொங்கல் தினத்தன்று இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் திறந்துவைக்கிறார்.
 

112 feet adiyogi statue will be unveiled by vice president at chikkaballapura near bengaluru
Author
First Published Jan 13, 2023, 3:18 PM IST

கோயம்பத்தூரில் சத்குரு நிறுவி நடத்திவரும் ஈஷா மையம் ஆன்மீக தளமாக திகழ்ந்துவருகிறது. ஈஷா மையம் ஆன்மீக பணிகள் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராம மக்கள், விவசாயிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்துவருகிறது. மண் காப்போம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கங்களின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டுவருகிறது.

கோயம்பத்தூர் ஈஷா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலை அனைவரையும் கவர்ந்தது. அதேபோல பெங்களூரு புறநகர்ப் பகுதியான சிக்கபல்லாபுராவில் அமைந்துள்ள ஈஷா மையத்திலும் பிரம்மாண்ட ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஈஷாவில் சப்தரிஷி ஆரத்தி..! காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் நடத்தினர்

பெங்களூருவிலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள புறநகர்ப்பகுதியான சிக்கபல்லாபுராவில் உள்ள ஈஷா மையத்தில் 112 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ஆதீயோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி பொங்கல் தினத்தன்று ஆதியோகி சிலையை இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் திறந்துவைக்கிறார். 

ஜனவரி 15ம் தேதி தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கர்நாடகாவில் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சங்ராந்தி தினமான ஜனவரி 15 அன்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆதியோகி சிலையை திறந்துவைக்கிறார். இந்த விழாவில் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் கலந்துகொள்கிறார்.

ஈஷாவின் வழிகாட்டுதலால் ரூ.17.7கோடி Turn over செய்த விவசாயிகள்! வெள்ளியங்கிரி உழவன்உற்பத்தியாளர் நிறுவனம் சாதனை

இந்த விழாவில் சிக்கபல்லாபுரா பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களும் கலந்துகொள்கின்றனர். பண்டிகை தினமான ஜனவரி 15 அன்று சுற்றுவட்டார கிராம மக்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்கின்றனர். ஆதியோகி சிலை திறப்புக்கு பின், 14 நிமிடம் ஆதியோகி திவ்ய தரிசனம் நடக்கவுள்ளது. இந்த விழாவில் ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளையும் நிகழ்த்தவுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios