சத்தீஸ்கரின் பலோடபஜார்-பட்டாபரா மாவட்டத்தில் டிரக் மீது பயணிகளின் வேன் மோதியதில் நான்கு குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்து நேற்று (வியாழக்கிழமை) இரவு நடந்தது. பலோடபஜார்-பட்டாபரா சாலையில் உள்ள பட்டாபரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கமாரியா கிராமத்திற்கு அருகே நடந்த விபத்தில் மேலும் 12 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்; மயிலாடுதுறையில் 5 மீனவர்கள் படுகாயம்

பாதிக்கப்பட்டவர்கள், சிம்கா பகுதியில் உள்ள கிலோரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அர்ஜூனி பகுதியில் ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்டுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபொது விபத்து நடந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சினிமா பாணியில் காரை குத்தி கிழித்த கொம்பன் யானை; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்

தகவல் கிடைத்த பின்னர், காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.