Asianet News TamilAsianet News Tamil

ஹோட்டலில் பயங்கர தீ விபத்து... கொரோனா நோயாளிகள் 11 பேர் உயிரிழப்பு.. உடனே 50 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்

ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உடல் கருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  11ஆக உயர்ந்துள்ளது.

11 patients killed in fire at COVID care facility
Author
Andhra Pradesh, First Published Aug 9, 2020, 12:34 PM IST

ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உடல் கருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  11ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவமனைகள் இல்லாத சூழலில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை அமைத்து அங்கிருக்கும் ஹோட்டல்கள், மருத்துவமனைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்காகவும் சில ஹோட்டல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

11 patients killed in fire at COVID care facility

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொகுசு ஹோட்டல் ஒன்று கொரோனா வார்டாக மாற்றப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதில், 22 பேர் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.   5 மாடி கொண்ட அந்த சொகுசு ஹோட்டலில் திடீரென இன்று காலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  ஹோட்டலில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.  

11 patients killed in fire at COVID care facility

உடனே இது தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், சொகுசு ஹோட்டலில் 3வது மாடியில் கொரோனா தொற்று சிகிச்சையிலிருந்த 10 நோயாளிகள் மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.

11 patients killed in fire at COVID care facility

இதனையடுத்து, தீ விபத்தால் உயிரிழந்த கொரோனா நோயாளி குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அிவித்துள்ளார். அதேபோல் பிரதம் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios