காமக்கியா- தேக்கார்கான் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், அசாம் மாநிலம் உதல்குரி மாவட்டத்தில் உள்ள ஹரிசிங்கா என்னும் இடத்தின் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென குண்டு வெடித்தது. 

இந்த பயங்கரமான குண்டுவெடிப்பில் பெண் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயமைடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹரிசிங்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.  ஓடும் ரயிலில் மாலை 6:45 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.