மஹாராஷ்டிராவின் தெற்குப்பகுதியில் உள்ள புல்தானா மாவட்டத்தில் 10 வயது பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

புல்தானா மாவட்டத்தில் அரசின் உதவியோடு ஆஷ்ரம்ஷாலா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இங்கு மாணவ, மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு சிறுமி​ ஒருவர், தீபாவளி பண்டிகைக்கு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது தனது பெற்றோர்களிடம், தனக்கு வயிறு வலிக்கிறது என்று கூறியுள்ளார். அவர்கள் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளி்த்தபோது, அந்த 10வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது கண்டு மருத்துவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

​இதையடுத்து உடனடியாக அந்த சிறுமியின் பெற்றோர்கள் மாவட்ட போலீஸ் எஸ்.பி.சஞ்சய்குமார் பவி்ல்கரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இந்த புகார் தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அது குறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. சஞ்சய்குமார் கூறுகையில், " பாதிக்கப்பட்ட அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினோம். அதில் தன்னைப் போல ஏராளமான சிறுமிகளை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி விடுதியை சுத்தம் செய்பவர், உள்ளிட்ட 11 பேர் இதுபோல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகத் தெரிவித்தார் " என்றார். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 11 பேர் மீது ஐ.பி.சி. 376 பிரிவின் கீழும், குழந்தைகளை பலாத்கார குற்றத்தில் இருந்து காக்கும் போஸ்கோ சட்டப்பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மாநில போலீஸ் டி.ஜி.பி. சஞ்சய்மாத்தூர் தெரிவிததார். 

மேலும், அவர் கூறுகையில், " இந்த சம்பவரம் குறித்து முதலில் அந்தசிறுமியின் பெற்றோர்களும் புகார் அளிக்கவில்லை. அந்த சிறுமி வசிக்கும் கிராமத்தின் நிர்வாகி அளித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளியின் விடுதிக்குள் தங்கியிருந்த ஒரு நபர்தான் இதில் முக்கிய குற்றவாளி. 

மற்றவர்கள் இந்த குற்றம் குறித்து அறிந்திருந்தும் வெளியில்கூறாமல் மறைத்துவிட்டனர். இந்த வழக்கு குறித்து விசாரிக்க எஸ்.பி. அதிகாரத்தில் உள்ள ஒரு அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். இதுபோல் எத்தனை குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை செய்யப்படும் " என அவர் தெரிவித்தார்.