10th student raped in running train

பீகாரில், ஓடும் ரயிலில் இருந்து 10-வது படிக்கும் மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் லக்சிசர் என்ற இடத்தில் இருந்து, கிமுல் ஜங்கன் நோக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலில் 10 வது படிக்கும் மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். அந்த பெட்டியில் இருந்த 6 பேர், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அவரை, ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளது அந்த கும்பல்.

ஆபத்தான நிலையில், தண்டவாளம் ஓரம் இருந்த அந்த பெண்ணை அவ்வழியே வந்தோர் பார்த்துள்ளனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு, பாட்னா மருத்துவக் கல்லூ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட அந்த பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பின்னர், போலீசாரிடம் அந்த பெண் கொடுத்த தகவலின்படி, இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இது குறித்து பேசிய பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.