ம.பி. குனோ தேசியப் பூங்காவில் 10வது சிறுத்தை மரணம்!

குனோவில் இதற்கு முன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஒன்பதாவது சிறுத்தை இறந்தது. கடந்த இரண்டு இறப்புகளுக்கும் மழைக்காலத்தில் பூச்சிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுகளே காரணம் என்று கூறப்பட்டது.

10th Cheetah Dies At Kuno National Park In Madhya Pradesh sgb

மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மற்றொரு சிறுத்தை இறந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் 2022இல் இருந்து குனோ பூங்காவில் இறந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இறந்த நமீபிய சிறுத்தைக்கு ஷௌர்யா என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்தச் சிறுத்தையின் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தெரியவரும் என்று பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை, 7 பெரிய சிறுத்தைகளும் மூன்று சிறுத்தை குட்டிகளும் குனோ தேசிய பூங்காவில் இறந்துள்ளன. இவை பல்வேறு நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்திருக்கின்றன.

"இன்று, ஜனவரி 16, 2024 அன்று மதியம் 3:17 மணியளவில், நமீபியன் சீட்டா ஷௌர்யா காலமானாது. காலை 11 மணியளவில், கண்காணிப்புக் குழுவினர் கவனித்தபோது, சிறுத்தை தடுமாறியபடி நடந்துகொண்டிருந்தது. பலவீனமாகவும் காணப்பட்டது" என்று என்று பூங்கா அதிகாரி கூறுகிறார்.

குனோவில் இதற்கு முன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஒன்பதாவது சிறுத்தை இறந்தது. கடந்த இரண்டு இறப்புகளுக்கும் மழைக்காலத்தில் பூச்சிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுகளே காரணம் என்று கூறப்பட்டது.

1952ஆம் ஆண்டில் இந்தியாவில் சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 2023 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 20 சிறுத்தைகள் வெளிநாட்டிலிருந்து குனோ பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்டன. நமீபியா (2022) மற்றும் தென்னாப்பிரிக்கா (2023) நாடுகளில் இருந்து இவை வரவழைக்கப்பட்டன.

இந்நிலையில், மேலும் பல சிறுத்தைகளை தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்திற்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios