ஆயிரம் ரூபாய் நோட்டின் ஆயுள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பழைய ஆயிரம் ரூபாயை பயன்படுத்தி இனி எந்த சேவையையும் பொருட்களையும் இன்று முதல் வாங்க முடியாது, வங்கிக் கவுன்ட்டர்களில் மாற்றவும் முடியாது. வங்கிக்கணக்கு உள்ளவர்கள் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும்.

கடந்த 1938-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் ரிசர்வ் வங்கி ரூ.1000 நோட்டு முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், 1946-ல் திரும்பப் பெறப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின்,கடந்த 1954-ம் ஆண்டு மீண்டும் ரூ.1000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

