Asianet News TamilAsianet News Tamil

"கர்நாடகாவில் தனியார் துறையிலும் 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை" விரைவில் வருகிறது புதிய சட்டம்!

100 percent of private sector Only works for karnataka Canaanites The law comes with the Karnataka govt
100 percent of private sector Only works for karnataka Canaanites The law comes with the Karnataka govt
Author
First Published Oct 3, 2017, 11:04 AM IST


கர்நாடக மாநிலத்தில் தனியார் துறைகளில் குரூப் சி, டி பிரிவு பணியிடங்கள் அனைத்திலும் 100 சதவீதம் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று சட்டம் கொண்டு வர கர்நாடக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இது தொடர்பாக வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தபின்பும்,மாநில அரசு இந்த உத்தரவுக்கு வலு சேர்க்க சட்ட பாதுகாப்பு ஏதும் அளிக்கவில்லை.இந்நிலையில், அந்த ஆணைக்கு சட்டவடிவம் கொடுக்க தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தனியார் துறைகளில் உள்ல புளூகாலர் பிரிவு பணியிடங்கள் எனப்படும் குரூப் சி, டி பிரிவுகளில் 100 சதவீதம் கன்னட மொழி பேசும் மக்களை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று மாநில சட்டஅமைச்சர் சமீபத்தில் அறிவித்தார். இது தொடர்பாக மாநில தலைமை வழக்கறிஞரிடம் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு ஆலோசனை கேட்டுள்ளது.
தனியார் துறைகளில் குரூப் சி, டி, பிரிவுகளில் 100சதவீதம் இட ஒதுக்கீடு என்பது, அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள சமத்துவம், சரிசம வாய்ப்பு என்ற பிரிவை மீறுவதாகும்

இதையடுத்து மாநில சட்ட அமைச்சர், தொழிலாளர் துறைஅமைச்சர்,  கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் கடந்த வாரத்தில் கூடி ஆலோசனை நடத்தி மாற்றுவழி குறித்து விவாதித்தனர். இந்த கூட்டத்தின் முடிவில் தனியார் துறைகளில் குரூப் சி,டி பிரிவில் 100 சதவீதம் கன்னட மொழி பேசும் மக்களே இட ஒதுக்கீடு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை கன்னட மொழியில் படித்த எவரும், குரூப் சி,டி பிரிவுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாகிறார்கள். இந்த தகுதியுடைய எவரையும் நிராகரிக்க கூடாது.

இது குறித்து சட்ட அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், “ தனியார் துறைகளில் 100 சதவீதம் கன்னடமக்களுக்கே வேலை அளிக்க வேண்டும் என்ற விஷத்தை மாநில அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது அதற்குரிய சட்ட நுனுக்கங்கள் குறித்து கேட்டறிந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர்மாதம் பிறப்பிக்கப்பட்ட 100 சதவீதம் கன்னடமக்களுக்கே என்ற உத்தரவு இப்போது வரை செல்லுபடியாகும். அதற்கு சட்டவடிவம் கொடுத்துபது குறித்து தீவிரமாகஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios