Asianet News TamilAsianet News Tamil

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 11 பேரின் கதி என்ன? முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிர்ச்சி தகவல்!!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து திரௌபதி கா தண்டா சிகரத்திற்கு செல்லும் வழியில் 11க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

10 Mountaineers Killed In Uttarakhand Avalanche, Search On For 11 Others
Author
First Published Oct 4, 2022, 4:58 PM IST

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து திரௌபதி கா தண்டா சிகரத்திற்கு செல்லும் வழியில் 11க்கும் மேற்பட்டவர்கள் சிக்கிக் கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுவதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் உத்தரகாசியில் நேரு மலையேறும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

10 Mountaineers Killed In Uttarakhand Avalanche, Search On For 11 Others

இந்தக் குழுவில் மொத்தம் 40 பேர் டிரக்கிங் செல்வதற்காக வந்துள்ளனர். இதில் 33 பயிற்சியாளர்கள் மற்றும் ஏழு பயிற்றுனர்கள் இருந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் மீட்புப் படையினர் சென்றுள்ளனர். இதுவரை பயிற்சியாளர்கள், பயிற்சி பெற்றவர்கள் என்று 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க..ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !

10 Mountaineers Killed In Uttarakhand Avalanche, Search On For 11 Others

“திரௌபதி தண்டா-2 மலை உச்சியில் பனிச்சரிவில் சிக்கிய பயிற்சியாளர்களை மாவட்ட நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், இந்திய திபத்திய எல்லை மீட்புப் படையினர், என்ஐஎம் குழுவுடன் இணைந்து விரைவாக மீட்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திரௌபதி தண்டா-2 மலை உச்சியில் ஏற்பட்ட பனிச்சரிவில் நான்கு மலையேறுபவர்கள் இறந்ததை நேரு மலையேற்ற நிறுவனம் உறுதி செய்துள்ளது. NIM படி, 34 பயிற்சியாளர்கள் மற்றும் 7 மலையேற்ற பயிற்றுனர்கள் உட்பட மொத்தம் 41 பேர் பனிச்சரிவில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?

Follow Us:
Download App:
  • android
  • ios