சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை 75 முறை உடைந்து விழுந்து சாதனை (!) படைத்துள்ளது. இதுதொடரும் நிலையில் நாட்டில் உள்ள விமான நிலையங்களை பராமரிப்பதற்கு 68 ஆயிரம் கோடி ரூபாய் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செலவிடப்படும் என விமானப் போக்குவரத்து துறை செயலர் ஆர்.என்.சவுபே தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்று பேசியதாவது:- அடுத்த 7 ஆண்டுகளுக்குள் விமான போக்குவரத்து துறையில் 3வது இடத்தை பிடிக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளோம்.

இதனை அடைவதற்க்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு 68 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு நாட்டில் உள்ள விமான நிலையங்கள் பராமரிக்கப்படும்.

இந்தியாவில் ரயில்வே துறை மூலமாக ஆண்டுக்கு 1.6 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதே நேரத்தில் விமானப் போக்குவரத்து மூலமாக 1.4 லட்ச ரூபாய் கிடைக்கிறது.

விமானப் போக்குவரத்து துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலமாக ரயில் பயணிகளும், விமான பயணிகளில் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் உள்ளனர்.

ரயிலில் ஏசி பிரிவில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு கிட்டத்தட்ட இணையாகத்தான் விமான கட்டணங்கள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.