10 and 12th class exams can be written on the computer!
சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வுகளை கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் எழுத புதிய வசதியை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெறும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால், இந் புதிய வசதியை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களே கம்ப்யூட்டர் அல்லது லேப்டாக் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கம்ப்யூட்டரில் இண்டர்நெட் இணைப்புக்கு அனுமதி இல்லை. மாணவர்கள் கொண்டு வரும் கம்ப்யூட்டரை முதலில் தேர்வு அதிகாரி சோதனை செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அது மட்டுமல்லாது, இந்த வசதியைப் பெற அந்த மாணவரின் வருகைப் பதிவு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்க வேண்டுமாம். இந்த வசதி குறிப்பிட்ட சில மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும என்றும் கூறப்படுகிறது.
