Asianet News TamilAsianet News Tamil

புதுவையில் தனியார் நிறுவன காசாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி ரூ.1.73 லட்சம் கொள்ளை

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி அருகே வங்கியில் பணம் செலுத்தச் சென்ற தனியார் நிறுவன காசாளரை வழி மறித்து கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த ரூ.1.73 லட்சத்தை திருடிவிட்டு தப்பி ஓடிய நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

1.73 lakh money robbery for private company cashier in puducherry
Author
First Published Jan 6, 2023, 4:52 PM IST

புதுச்சேரியின் லாஸ்பேட்டை குமரன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் ஒரு தனியார் மருந்து மொத்த விற்பனை நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த பாலசுப்பிரமணியன், அந்நிறுவனத்தில் நேற்று வசூலான பணம் ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு 100 அடி ரோடு இந்திரா காந்தி சிலை அருகிலுள்ள வங்கியில் டெபாசிட் செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 

திருப்பூரில் கடன் பெற்றவர்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்த கும்பல் கைது

வண்டியின் டிக்கியில் பணத்தை வைத்துக் கொண்டு பைக்கில் தனது நிறுவனத்தில் இருந்து வெளியேறிய 50 மீட்டர் தொலைவில் அங்கு முககவசம் அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் திடீரென வழிமறித்தனர். பின்னர் பாலசுப்பிரமணியன் கழுத்தில் கத்தியை வைத்து வசூல் பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். அவர் தரமறுக்கவே பாலசுப்பிரமணியனின் கையில் கத்தியால் வெட்டிவிட்டு அவரது வண்டி டிக்கியில் இருந்த ரூ.1.73 லட்சத்தை பறித்துக் கொண்டு பைக்கில் ஏறி தப்பிஓடி விட்டனர்.

இதையடுத்து பாலசுப்பிரமணியன் கூச்சல் போடவே, அவ்வழியாக சென்றவர்கள் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி கோரிமேடு காவல் நிலையத்துக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உதவியாளர் பாலமுருகன் உத்தரவின்பேரில் எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி; கமல்ஹாசன் விருப்பம்

மேலும் பாலசுப்பிரமணியத்திடம் சம்பவம் குறித்து கேட்டறிந்ததோடு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மருந்து கம்பெனி காசாளர் தினமும் வசூல் பணத்தை எடுத்துச் செல்வதை பல நாட்களாக நோட்டமிட்டு வழிப்பறியில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios