வரி கொஞ்சம் உயர்ந்தாலும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: காங். வாக்குறுதிகள் குறித்து சாம் பிட்ரோடா கருத்து

காங்கிரஸ் அறிவித்துள்ள மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வாய்ப்புகளை அளிக்கும் என்றும் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.

'Don't be selfish': Sam Pitroda roasted for middle-class tax hike remark if Congress comes to power sgb

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியான சில நாட்களில் அது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. ஆட்சிக்கு வந்தால் ஏராளமான சலுகைகள் மற்றும் மானியங்களை காங்கிரஸ் அறிவித்துள்ளதால், அது நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி சுமையை விதிக்கும் சாத்தியக்கூறு உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

இது குறித்து ராகுல் காந்தியின் அரசியல் ஆலோசகரும் தொழிலதிபருமான சாம் பிட்ரோடா விவாதிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி இருக்கிறது. எப்போது பதிவு செய்யப்பட்டது என்று சரிபார்க்க இயலாத இந்த வீடியோவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கிறார்.

வீடியோவில், பிட்ரோடாவிடம் பேட்டி எடுப்பவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டங்களின் சுமை நடுத்தர வர்க்கத்தினர் மீதுதான் விழுமா என்று கேட்கிறார்.

தமிழ்நாட்டில் 9 இடங்களில் சதமடித்த வெயில்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தக் கேள்விக்கு பதிலளித்த பிட்ரோடா, "அது உண்மை இல்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இன்று வேலைவாய்ப்பு இல்லை. வரிகள் கொஞ்சம் உயரலாம். நான் அதை ஒரு பெரிய பிரச்சினையாக நினைக்கவில்லை. அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "சுயநலமாக இருக்கக் கூடாது. பரவாயில்லை என பெரிய மனது வைக்கவேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ள சாம்,  "உங்களைச் சுற்றியுள்ள ஏழைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், அவர்களில் யாராவது உங்களிடமிருந்து 10 பைசாவை எடுக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வைரல் வீடியோவில் பிட்ரோடாவின் கருத்துகள் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைக் கூறிவருகின்றனர். "உண்மையில் எப்போதுமே வரி விதிப்பு ஒரு பிரச்சினை இல்லை. ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே உண்மையான பயனாளியைச் சென்றடைகிறது என்பதை ராகுல் காந்தி சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்" என்று ஒரு ட்விட்டர் பயனர் கூறுகிறார்.

மற்றொரு பயனர், "அற்புதமான பிட்ரோடா, இந்திய எல்லைக்கு வெளியே எங்கோ வசிக்கிறார், ஆனால் இந்தியர்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்று முடிவு சொல்கிறார்" என்று விமர்சனம் செய்துள்ளார்.

'சென்னை என் மனதை வென்றது!' ரோடு ஷோவில் கூடிய கூட்டத்தைப் பார்த்து உருகிய பிரதமர் மோடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios