Asianet News TamilAsianet News Tamil

India@75: இந்து முஸ்லீம் மத ஒற்றுமையை போற்றும் அயோத்தி வரலாறு...!

இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது அயோத்தியில் உள்ள பைசாபாத் சிறையின் உள் இருக்கும் குபெர் டெலா மரத்தில் தூக்கில் இடப்பட்டனர்.

The historic solidarity between Hindus and Muslim in Ayodhya
Author
India, First Published Jun 25, 2022, 5:35 PM IST

இந்து மற்றும் முஸ்லீம் மத மோதல் என்றாலே பலரின் நினைவுக்கு வருவது அயோத்தியா தான். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட காரணத்தால் இந்து - முஸ்லீம் மதத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. எனினும், அயோத்தியா வரலாறு இந்து முஸ்லீம் மதத்தினர் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக சண்டை இட்டதில் இருந்தே துவங்குகிறது. இந்த வரலாற்றை இரண்டு மதங்களை சேர்ந்த பிரிவினை வாதிகள் மறக்கடிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய சுதந்திர போராட்டத்தின் அடித்தளமாக 1857 ஆண்டு ஏற்பட்டு இந்து - முஸ்லீம் மத நல்லிணக்கம் தான் இருந்தது. அயோத்தியாவில் இந்த இரண்டு மதங்களை சேர்ந்த படையினர் அயோத்தியாவின் மௌல்வியான அமீர் அலி, அனுமன் கார்ஹி கோயிலின் தலைமை பூசாரி பாபா ராம் சரண் தாஸ் தலைமையில் ஒன்று கூடி இருந்தனர். இதன் மூலம் 1857 ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் ஆயுதம் ஏந்தினர். 

The historic solidarity between Hindus and Muslim in Ayodhya

தூக்கு தண்டனை:

இதன் பின் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது அயோத்தியில் உள்ள பைசாபாத் சிறையின் உள் இருக்கும் குபெர் டெலா மரத்தில் தூக்கில் இடப்பட்டனர். இவர்களை போன்றே ஆங்கிலேயர்களின் தூக்கத்தை இழக்கச் செய்ததற்கு பைசாபாத் ராஜ்ஜியத்தின் தேவி பக்‌ஷ் சிங், அக்கன் கான் மற்றும் சம்பு பிரசாத் சுக்லா ஆகியோர் காரணமாக விளங்கினர். கான் மற்றும் சுக்லா இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல பிரச்சாரங்களை வெற்றிகரமாக செய்து முடித்தனர். 

எனினும், ஆங்கிலேயர்கள் தரப்பில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, தூக்கில் இடப்பட்டனர். 1857 ஆண்டு வாக்கில் நிலவிய இந்து முஸ்லீம் மதத்தினரின் உள்ளுணர்வு தான் நல்லிணக்கம் ஏற்பட காரணமாக இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இரு மதத்தை சேர்ந்த தலைவர்களின் சிறப்பான செயல்பாடுகளும் அவர்கள் வைத்து இருந்த நாட்டுப் பற்றுக்கு சான்றாக அமைகிறது. இவர்களில் நானா சாஹெம் பகதூர் ஷா சஃபர், ரானி லக்‌ஷமி பாய், அகமது ஷா மௌல்வி, தாந்திய தோப், கான் பகதூர் கான், ஹசரத் மகால், அசீமுல்லா கான் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios