india @75: ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைபெற்ற முதல் போர்.. தரமான சம்பவம்...!
அரண்மனையின் உள்ளே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்த நிலையில் தாக்குதல் நடைபெற்றது.
இந்தியாவின் தென் மேற்கு கடலோர பகுதியான அஞ்சுதெங்கு எனும் மீன்பிடி கிராமம் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்த காலக்கட்டம். பம்பாய்க்கு அடுத்தப் படியாக ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்தியா கோட்டையாக திருவணந்தபுரத்தை அடுத்த அஞ்சுதெங்கு கோட்டை விளங்கியது. இந்தியாவில் அரசியல் செய்ய துவங்கும் முன், கிழக்கு இந்தியா நிறுவனம் வர்த்தகத்தை மட்டும் செய்து வந்தது.
ஆங்கிலேயர்கள் மிலகு வாங்க மட்டும் அட்டிங்கல் ராணி அனுமதி அளித்து இருந்தார். தட்சுக்களின் வளர்ச்சியை அடியோடு நிறுத்த அட்டிங்கல் ராணி முடிவு செய்தார். ஆங்கிலேயர்கள் உள்ளூர் மக்கள் மீது ஊழல், தாக்குதல், அத்துமீறல் உள்ளிட்டவைகளை கட்டவிழ்த்தனர். இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் மீது ஆங்கிலேயர்கள் அவமதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவற்றை பொறுத்துக் கொள்ள முடியாத அஞ்சுதெங் மற்றும் அட்டிங்கல் மக்கள் பதிலடி கொடுக்க சரியான நேரத்திற்கு காத்துக் கொண்டு இருந்தனர். எட்டுவீட்டில் பிள்ளைகள், ஃபியூடல் லார்டுகள் கோபத்தில் இருந்த பொது மக்களை ஒன்று திரட்டினர்.
மாபெரும் தாக்குதல்:
ஏப்ரல் 14, 1721 அன்று கிழக்கு இந்தியா நிறுவனத்தின் உள்ளூர் தலைவர் வில்லியம் கிஃபோர்டு 140 ராணுவ வீரர்கள் மற்றும் அடிமைகளுடன் வமனாபுரம் ஆற்றில் படகு மூலம் பயணம் செய்து கொண்டு இருந்தார். இவர்கள் ராணியை சந்தித்து, பரிசு பொருள் வழங்க சென்று கொண்டு இருந்தனர். அரண்மனையின் உள்ளே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. இந்த நிலையில், தான் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மாபெரும் தாக்குதல் நடைபெற்றது.
பல மணி நேரங்கள் நீடித்த தாக்குதலில் ஒரு ஆங்கிலேயரும் உயிர் பிழைக்கவில்லை. வமனபுரம் ஆறு முழுக்க சிவப்பு நிறத்திற்கு மாறியதோடு, சடலங்களால் நிரம்பி போனது. கிஃபோர்டு உடல் கட்டை ஒன்றில் கட்டப்பட்டு நாக்கு நீக்கப்பட்ட நிலையில், ஆற்றில் வீசப்பட்டார். இதை அடுத்து அஞ்சுதெங் கோட்டையும் பொது மக்களால் கைப்பற்றினர். இந்த சம்பவம் பிலாசி போர் நடைபெற 36 ஆண்டுகள் இருக்கும் போது நடைபெற்றது.
136 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் முதல் சுதந்திர போர் நடைபெற்றது. இந்த வரலாற்று சம்பவம் மூலம் இந்திய குடிமக்கள் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து கைப்பற்ற வந்தவர்களை முழங்காலிட செய்தனர்.