Indian Fashion
காட்டன் பட்டு, மல்மல், லினன், காதி மற்றும் சந்தேரி பட்டு - இந்த 5 புடவைகள் உங்கள் அலுவலக தோற்றத்தை ஸ்டைலிஷாக மாற்றும்.
காட்டன் பட்டு புடவைகள் லேசானவை. நாள் முழுவதும் அணிய இந்தப் புடவை சரியான தேர்வாகும். எனவே அலுவலகத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
எளிமையான தோற்றத்தைக் கொடுக்கும் மல்மல் புடவை, நீண்ட நேரம் அணிய வசதியானது. இது உங்களுக்கு மிடுக்கான தோற்றத்தையும் தரும்.
ஸ்டைலான லினன் பட்டுச் சேலை அணிவதற்கும் வசதியானது. இந்தப் புடவைகள் உங்களுக்கு அலுவலகத்தில் அழகிய தோற்றத்தைத் தரும்.
காதி பட்டுப் புடவைகள் காலத்தால் அழியாதவை. அலுவலகத்தில் ஸ்டைலிஷ் மற்றும் நுட்பமான தோற்றத்திற்கு இவை சிறந்த தேர்வாக இருக்கும்.
சந்தேரி பட்டு புடவையில் கம்பீரத்தைக் கொடுக்கும். அலுவலகத்தில் எளிய ரவிக்கையுடன் அணிந்து நேர்த்தியான தோற்றத்தைப் பெறுங்கள்.