உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

உலக கோப்பை தொடர் வரும் மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடும் இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் இடம் பெற்றிருந்தார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் நடந்த போட்டியில் அபார சதமடித்தார். 

இந்தப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நைல் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலில் பலமாக தாக்கியது. ஆனால் வலியையும் பொருட்படுத்தாமல் விளையாடி சதம் அடித்தார். அந்த விரல் கடுமையாக வீக்கத்தை அடுத்து, அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜா பீல்டிங் செய்தார்.

இந்நிலையில் தவான் கைவிரலில் ஏற்பட்ட காயம் குறித்து பரிசோதித்த மருத்துவர்கள் 3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனையடுத்து அவர் உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது. ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.