You should know about the medical benefits of Trigonella

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இதன் பூர்வீகம் அமரிக்கா, பின் ஆப்பிரிகாவுக்கும் இந்தியாவுக்கும் பரவிற்று. இதை வீட்டுப்பந்தல்களில் கீரைக்காகவும், அழகுக்காகவும் கிராமங்களில் வளர்க்கிறார்கள்.

இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. அதிலும் இந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இன்னும் நிறைய நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கீரையைக் கொடுப்பது மிகவும் இன்றியமையாதது.

இதனால் குழந்தைகளின் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, பசலைக் கீரையில் வளமான அளவில் இரும்புச் சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள்.

முக்கியமாக உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்கள், இதனை தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். இது மாதிரி பசலைக் கீரையை உட்கொண்டால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

இங்கு அந்த பசலைக்கீரையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்தால், நிச்சயம் இந்த கீரையை உணவில் சேர்க்காமல் இருக்கமாட்டீர்கள். குறைந்த கலோரி பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.

அதிக வைட்டமின்கள்: பசலைக்கீரையில் வைட்ட மின் `ஏ’, `கே’ மற்றும் `ஈ’ அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த் தொற்றுகளான சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

மலச்சிக்கலில் இருந்து விடுதலை: தினமும் ஒரு கப் பசலைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும்.

ரத்த அழுத்தம் குறையும்: பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந் துள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உயர் ரத்த அழுத்தத்தினால் உண்டாகும் மோசமான நிலையில் இருந்து பாதுகாக்கும்.

புற்றுநோயை எதிர்க்கும்: பசலைக் கீரையில் ஃப்ளே வோனாய்டு என்னும் அத்தியாவசிய பைட்டோ நிïட்ரி யண்ட்டுகள் இருக்கிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அதிகம் உள்ளது. அதிலும் இந்த பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

சீரான ரத்த அழுத்தம்: இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

ஆரோக்கியமான இதயம்: ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

கொழுப்பை கரைக்கும்: பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண் டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.

சரும பாதுகாப்பு: பசலைக்கீரையில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கனி மச்சத்துக்கள், சருமத்தில் எண்ணெய் பசையைத் தக்க வைத்து, சரும வறட்சியில் இருந்து நிவாரணம் தரும். அதுமட்டுமின்றி, இது சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் சுருக்கங்களில் இருந்தும் விடுதலை அளிக்கிறது.

கண்ணுக்கு பாதுகாப்பு: பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.

மூளை, நரம்பு மண்டலம்: பசலைக்கீரையில் நல்ல அளவில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களாகும்.

எலும்புகளின் அடர்த்தி: ஒரு கப் வேக வைத்த பசலைக்கீரையில் வைட்டமின் `கே’ வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கும் வகையில், எலும்புகளில் ஆஸ்டியே கால்சின் என்னும் புரோட்டினை அதிகரிக்கிறது.

மூட்டு வலியில் இருந்து விடுதலை: மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலி யைக்குணப்படுத்தும்.

ரத்த சோகை: பசலைக்கீரையில் இரும்புச்சத்து வளமாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண் டால், உடலில் ரத்தத்தின் அளவு அதிகரித்து, ரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.