You have done a lot to prevent hair loss. Is this ringing

1.. எலுமிச்சை

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

எலுமிச்சையில் நிறைய கூந்தலுக்கான நன்மைகள் உள்ளன. அதிலும் எலுமிச்சை சாற்றினை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, பொடுகுத் தொல்லை, வறட்சியான ஸ்கால்ப் போன்றவை தடைப்படும்.

2.. ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான இனிப்பு சுவையுடைய ஆரஞ்சு பழங்கள் கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதற்கு ஆரஞ்சு பழத்தின் சாற்றினை தலையில் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், நல்ல பலனைப் பெறலாம்.

3.. பப்பாளி

வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்களில் பப்பாளி பழத்தின் சாற்றினை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.

4.. பெர்ரிஸ்

இந்த அடர்ந்த நிறமுடைய பழங்கள் கூந்தல் உதிர்தலை தடுக்கவும், கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உறுதுணையாக உள்ளது. எப்படியெனில் இதில் உள்ள பயோஃப்ளேவோனாய்டுகள், இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, மயிர்கால்களை வலுவாக்கி, கூந்தல் உதிர்தலைத் தடுக்கின்றன.

5.. ப்ளம்ஸ்

நல்ல ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அப்படியெனில் கூந்தலைப் பராமரிக்க ப்ளம்ஸ் பயன்படுத்த வேண்டும். அதிலும், ப்ளம்ஸ் வைத்து, ஹேர் மாஸ்க் போட்டால், கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.