Asianet News TamilAsianet News Tamil

இறைச்சிகளின் உறுப்புகளை சாப்பிடுவதால் என்னவெல்லாம் பயன்கள் கிடைக்கின்றன?

What are the benefits of eating meat organs?
What are the benefits of eating meat organs?
Author
First Published Oct 9, 2017, 1:23 PM IST


ஆடு, மாடு, பன்றி இறைச்சி, கோழி போன்றவற்றின் உறுப்புகளை சாப்பிடுவதால் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கின்றன.

இறைச்சியில் உள்ள ஈரல், குடல் போன்ற உறுப்புகளை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது
பொதுவாக அசைவத்தை சாப்பிடுபவர்கள் ஆடு, மாடு, பன்றி, கோழி போன்றவற்றின் உறுப்புகளை தனித்தனியே அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை. சதைப் பகுதியை சாப்பிடுவதையே விருப்பமாக கொண்டிருப்பார்கள்.

உண்மையில் சதைப் பகுதியை விட அவற்றின் மூளை, குடல் ஈரல், ஆகியவைகள் மிகவும் சத்துக்கள் உடையவை.

எந்த உறுப்பு எந்த மாதிரியான நன்மைகள் தருகிறது?

கல்லீரல்:

இது மல்டி விட்டமின் அடங்கியது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. உறுப்பு இறைச்சிகளிலேயே அதிக சக்தியை கொண்ட சக்தி கோபுரமாக விளங்குகிறது.

சிறு நீரகம்:

மனிதனைப் போலவே மிருகங்களுக்கும் இரண்டு சிறு நீரகங்கள் உள்ளன. இவை நச்சுக்களையும் கழிவுகளையும் அகற்ற உதவுகிறது.

மூளை:

இது மிகவும் நுட்பமானதாக இருக்கும். சிக்கலுடைய உறுப்பு என்றாலும் அதிக ஒமேகா3 அமினோ அமிலங்கள் நிரம்பியது. உறுப்புகளில் மிகவும் அதிகப்படியான இரும்புச் சத்து கொண்டிருக்கிறது. 

இறைச்சியின் சதைப்பகுதியை விட உறுப்புக்களை சாப்பிடுவதால் வயிறு விரைவில் நிரம்பிவிடுகிறது. அதோடு பசியும் உடனே எடுப்பதில்லை.

உறுப்பு இறைச்சிகளில் அதிக கொலைன் இருப்பதால் அவை மூளைக்கு தேவையான சக்தியையும் வலுவையும் தருகிறது.

உறுப்பு இறைச்சி சதைப்பகுதியைக் காட்டிலும் விலை மலிவானது. ஆரோக்கியமானதும் கூட. உங்களின் தசை வலிமையை அதிகப்படுத்தும்.

Follow Us:
Download App:
  • android
  • ios