Want to lower your body weight faster? Eat this cheese like this ...

முருங்கைக்கீரையில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமது வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை – 1/4 கப்

தண்ணீர் – 1 கப்

எலுமிச்சை – 1/2

தேன் – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் முருங்கைக் கீரையை 1 கப் நீர் ஊற்றி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி, அதில் பாதி எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்தால், ஜூஸ் தயார்.

குடிக்கும் முறை

இந்த முருங்கைக் கீரை ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது இரவு உணவு சாப்பிட்ட 1/2 மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.

நன்மைகள்

முருங்கைக் கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், இது உடலினுள் இருக்கும் உட்காயங்கள் அல்லது அழற்சியைக் குறைக்க உதவுகிறது.

முருங்கைக் கீரை குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, நோய்களின் தாக்கத்தை தடுக்கிறது.

முருங்கைக்கீரை உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கலோரிகளை வேகமாக கரைத்து, அசிங்கமான தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.

குறிப்பு

இந்த ஜூஸை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்த பின் இடைவெளி விட வேண்டும். முக்கியமாக ஏதேனும் மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த ஜூஸை குடிக்கக் கூடாது.