tongue dry also indicates that we have sugar in blood

ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் தான் காரணம்.

இரத்தத்தில் இருக்கும் அதிகளவு சர்க்கரையைக் குறைக்க மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, வீட்டு சமையலறையில் உள்ள இந்த பொருட்களால் அற்புத பானம் தயாரித்து பருகலாம்.

முதலில் இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள் பற்றி பார்ப்போம்...

அறிகுறிகள்

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், வாய் வறட்சி, வயிற்று பிரச்சனைகள், எப்போதும் தாகம், சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு, பாலியல் உறவில் நாட்டமின்மை, கவனச் சிதறல், நரம்பு பிரச்சனைகள், எந்நேரமும் பசியுணர்வுடன் இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவில் சிறுநீர் கழிப்பது, நாள்பட்ட சோர்வு, மங்கலான பார்வை, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:

தண்ணீர் – 1 லிட்டர்

கிராம்பு – 60 கிராம்

பட்டை – 4 துண்டுகள்

தயாரிக்கும் முறை:

நீரில் கிராம்பையும், பட்டையையும் போட்டு கலந்து, ஃப்ரிட்ஜில் 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். இந்த கலவையை மருந்து.

எப்போது பருக வேண்டும்?

இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் 100 மிலி குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வர, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருப்பதுடன், இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதையும் காணலாம்.