வைட்டமின் டி ஊட்டச்சத்து உடலுக்கு எப்போது, எவ்வளவு தேவை..? உங்களுக்கு தெரியுமா?
ஒரு நாளில் வைட்டமின்-டி மாத்திரைகளை எப்போது சாப்பிடவேண்டும் என்கிற நடைமுறையும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அது தொடர்பான தகவல்களை தான் இங்கு விரிவாக பார்க்க இருக்கிறோம்.
எலும்பு நலனுக்கு தேவைப்படும் முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் டி. மேலும் இது உடலின் எதிர்ப்பு சக்திக்கு இன்றியமையாததாகும். வைட்டமின்-டி குறைபாடு கொண்டவர்கள், உடனடியாக அதை பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். ஒருவேளை மருந்து வடிவில் வைட்டமின் டி பெற விரும்புபவர்கள் மருத்துவ ஆலோசனையோடு செயல்படவேண்டும். மருத்துவர் உங்களுடைய உடல் திறனை ஆராய்ந்து, அதனுடைய தன்மைக்கேற்ப வைட்டமின்-டிக்கான மருந்துகளை பரிந்துரைப்பார். அதே சமயத்தில் ஒரு நாளில் வைட்டமின்-டி மாத்திரைகளை எப்போது சாப்பிடவேண்டும் என்கிற நடைமுறையும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அது தொடர்பான தகவல்களை தான் இங்கு விரிவாக பார்க்க இருக்கிறோம்.
வைட்டமின் டி மருந்துகளை சாப்பிடுவதற்கான நேரம்
பொதுவாக வைட்டமின் டி ஊட்டச்சத்தினை காலையில் பெறுவது உடலுக்கு நன்மையை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கு மருந்து உட்கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. காலையில் பூமி மீது விழும் சூரிய ஒளியில் நீங்கள் சில நிமிடங்கள் நின்றாலே போதுமானது. குறைந்தது 10 முதல் 20 நிமிடங்கள் வரை நின்றால் அன்றைய நாளுக்கான வைட்டமின்-டி ஊட்டச்சத்து உங்களுக்கு கிடைத்துவிடும். அதன்காரணமாகவே காலைவேளையில் நடைப்பயிற்சி செய்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது மற்றும் உரிய உணவுகளை சாப்பிடுவது போன்றவை வைட்டமின் டி பெறுவதற்கு முக்கிய அம்சங்களாக உள்ளன. ஒரு சிலருக்கு அவ்வப்போது உடல்நலம் குன்றிவிடும். இதற்கு காரணம் வைட்டமின் டி குறைபாடு என்று தாராளமாக சொல்லலாம். இவ்வாறு அடிக்கடி உடல் நல பாதிப்புகளை பெறுபவர்கள் காலை வேளையில் சூரியவெளிச்சத்தில் நின்றாலே போதுமானது. உடனடியாக இது போன்ற பிரச்சனைகள் நீங்கிவிடும்.
சூரிய ஒளி மிகவும் தேவை
நமது உடலுக்கு தேவையான வைட்டமின் டி ஊட்டச்சத்தினை சூரிய வெளிச்சத்தின் வாயிலாகவே பெறுவதற்கு வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் உடல் பாகங்களை 15 முதல் 20 நிமிடங்கள் வரை சூரிய வெளிச்சத்தில் காட்டினால், வைட்டமின் டி ஊட்டச்சத்து உங்களுக்கு போதுமான வரை கிடைக்கும். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் என்கிற கணக்கில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இதை பின்பற்றி வந்தாலே போதுமானது. காலை 10 மணி முதல் நண்பகல் 3 மணி வரை, வரக்கூடிய சூரிய வெளிச்சத்தில் உங்களுடைய உடலை நீங்கள் காட்டினால் வைட்டமின் டி ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்கப்பெறும். அதுவும் நண்பகல் நேரம் என்றால் சூரிய வெளிச்சம் உச்சமடையும். அப்போது உடலில் வெயில் படும் படி நின்றாள் நமக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும்.
வெறும் வயிற்றில் பச்சையாக ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள்- அப்புறம் அதிசியம் நடக்கும் பாருங்கள்..!!
வைட்டமின் டி கொண்ட உணவுகள்
இனி வரக்கூடிய மாதங்கள் குளிர்காலம் என்பதால், அப்போது வைட்டமின் டி ஊட்டச்சத்தை உணவுகள் மூலமாகவே பெறமுடியும். அதற்காக சாலமன் மீன்கள், சிவப்பு இறைச்சி, முட்டை மஞ்சள் கரு, ஈரல் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் உணவுகளை எடுத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல், பல்வேறு உடற்பயிற்சிகளை தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும். முடிந்தவரையில் சோம்பலாக இருப்பதை தவிர்க்கவும். சீரான உணவு முறை, சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது, எப்போதும் உடலை இயக்கத்தில் வைத்துக்கொள்வது உள்ளிட்ட செயல்பாடுகள் குளிர்காலங்களில் உங்கள் உடலுக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின் டி ஊட்டச்சத்தினை போதுமான வரையில் கொண்டு சேர்க்கும்.
எடை குறைப்புக்கு உறுதுணை செய்யும் பாப்கார்ன்..!!
எதுவாக இருந்தாலும் அளவோடு இருக்க வேண்டும்
உடலில் வைட்டமின் டி குறைபாடு இருக்கிறது என்பதால், அதற்காக உணவுகளை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது உள்ளிட்ட செயல்பாடுகள் செய்ய வேண்டும் தான். அதற்காக அளவு மீறி சென்று விடக்கூடாது. எதுவாக இருந்தாலும் அளவோடு இருப்பதில் தான் உடல்நலம் இருக்கிறது. உடலுக்கு வைட்டமின் டி அதிக அளவில் சேர்ந்துவிட்டால், அதனால் பல்வேறு உடல் பிரச்சினைகள் ஏற்படலாம். குறிப்பாக பதின் வயதில் இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பக்க விளைவுகள் அதிகமாகவே இருக்கும். கைக்குழந்தைகள் முதல் 10 வயது குழந்தைகள் வரை வைட்டமின் டி 50 மைக்ரோகிராம் அளவில் மட்டுமே இருக்க வேண்டும். அதுவே 12 வயதிற்கு அதிகமான குழந்தைகளுக்கு 25 மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் டி இருக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.