Those who want to reduce body weight get the drinks if they drink this drink ...

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலுக்கு நல்ல கவசமாக இருக்கும் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானங்களை அன்றாடம் குடிப்பது மிகவும் நல்லது. அதிலும், கற்றாழை ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. 

நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடியைக் கலந்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். 

ஆம்...

நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடி கலந்து குடிப்பதால் உடலினுள் ஏற்படும் நன்மைகள் இதோ...

ஜூஸ் தயாரிக்கும் முறை: 

ஒரு டீஸ்பூன் வெந்தய பொடியை, 3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

நன்மைக்கள்:

** இந்த பானத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சக்தியைக் கொண்டதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த பானத்தைக் குடித்து வந்தால், சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

** எடையைக் குறைக்க நினைப்பவர்கள், இந்த பானத்தைக் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த ஜூஸ் உடலால் புரோட்டீனை உறிஞ்சும் அளவை அதிகரிப்பதால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, உடல் எடை குறைய உதவி புரியும்.

** இந்த பானத்தில் வைட்டமின்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளது. இவை இதய தசைகளின் வலிமையை அதிகரித்து, இதய நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

** உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தான் அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும். ஆனால் இந்த பானத்தில் உள்ள வைட்டமின் சி, உடல் செல்களுக்கு ஊட்டமளித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.

** நெல்லிக்காய் வெந்தய ஜூஸில் உள்ள வைட்டமின் சி, பித்தப்பை மற்றும் கல்லீரலில் கொலஸ்ட்ரால் இறுக்கமடைவதைக் குறைத்து, பித்தக்கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும்.

** வாய் மற்றும் வயிற்று அல்சர் உள்ளவர்கள், இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், புண் விரைவில் குணமாகிவிடும்.

** இந்த பானத்தில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள், பார்வை நரம்புகளுக்கு ஊட்டமளித்து, பார்வை கோளாறை நீக்கி, கண் பார்வையை மேம்படுத்தும்.