உடலில் வீசும் கடுமையான துர்நாற்றத்தை போக்க...

சிலரது அருகில் செல்லவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் அடிக்கும். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறார்களே தவிர, எதற்காக நமது உடலில் துர்நாற்றம் அடிக்கிறது என்று கண்டறிவதில்லை. 

எதற்காக துர்நாற்றம் அடிக்கிறது?

** கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்து புரோட்டினின் அளவை அதிகமாக்கும்போது உடலில் துர்நாற்றமடிக்க வாய்ப்புள்ளது. 

** கீட்டோன்கள் அதிகமாக வெளியேற்றப்பட்டு, இதனால் உடல் துர்நாற்றத்தை மட்டுமின்றி, சிறுநீர் துர்நாற்றமும் ஏற்படும். எனவே கார்போஹைட்ரேட் உணவை அதிகமாக எடுத்தல் நல்லது.

** மலச்சிக்கல் உள்ளவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசும். இவர்களின் உடலில் இருந்து டாக்ஸின்கள் முறையாக செரிமான மண்டலத்தின் வழியே வெளியேற்றப்படாமல் இருப்பதால், அவை சருமத்துளைகளின் வழியே வெளியேறும், இதனால் துர்நாற்றம் வீசும்.

** மாட்டிறைச்சி உடல் துர்நாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது செரிமானம் ஆக நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும், இதனால் உடலில் இருந்து வாயு வெளியேறி, துர்நற்றம் வரும். 

** அதுமட்டுமின்றி, மாட்டிறைச்சியில் உள்ள அமினோ ஆசிட், சருமத்தில் உள்ள பாக்டீரியாவுடன் சேரும்போது, அது கெட்ட துர்நாற்றத்தை வீசும்.

** சர்க்கரை நோயுள்ளவர்களின் உடலில் இன்சுலின் குறைபாடு உள்ளதால் கொழுப்புக்கள் உடைக்கப்படுகிறது. இப்படி உடைக்கும் போது அவை கீட்டோன்களாக மாறி, உடலில் கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

** ஆல்கஹால் அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தாலும், உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகமாக வீசும்.

** மன அழுத்தத்தினால் வெளிவரும் வியர்வையில் துர்நாற்றம் அடிக்கும், ஏனெனில் இந்த வியர்வையானது புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களுடன் சேர்ந்து அபோகிரைன் என்னும் சுரப்பியில் இருந்து சுரக்கும்.