பற்களில் கிருமிகள் படிந்து நாளடைவில் அவை கறைகளாக மாறிவிடுகின்றன. இவை அழகு மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டையுமே சேர்த்து கெடுத்துவிடுகிறது.

குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது பற்களையும் ஈறுகளையும்  நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு பல் மருத்துவரிடம் தான் போக வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை.

இந்த எளிய இயற்கை வழிகள் மூலம் மிக எளிமையாக பற்களை நாமே சுத்தம் செய்து கொள்ள முடியும்.

1.. அரை லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் முந்திரி, பாதாம், வால்நட், பிஸ்தா ஆகிய ஏதேனும் நட்ஸின் ஓடுகளை பொடி  செய்து அதனுள் போடவும். 

2.. தண்ணீர் நன்கு கொதித்து சிறிது நேரத்தில் இது பசை போல் ஆகிவிடும். 

3.. இந்த கலவை ஆறியதும் தினமும் இரண்டு முறை இந்த பேஸ்ட் கொண்டு பல் துலக்கினால் பற்களில் உள்ள அத்தனை கறைகளும் காணாமல் போய்விடும்.

4.. மற்றொரு எளிய முறையும் உண்டு. அது என்னவென்றால், நன்கு கொதிக்கும் நீரில் சூரியகாந்தி விதைகளை தூள் செய்துபோட்டு அதனுடன் எலுமிச்சை சாறையும் சேர்த்து கொதிக்க வையுங்கள். 

5.. நன்கு கொதித்ததும் பேஸ்ட் போல கெட்டியாக வரும். அந்தக் கலவையைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் கறைகள் நீங்கி, பளிச்சிடுவதை நீங்களே அறிவீர்கள்.