Asianet News TamilAsianet News Tamil

தீராத வயிற்றுவலிக்கும் தீர்வளிக்கும் அருமருந்து…

The healing of chronic colic and settling ...
the settling-beyond-the-healing-of-chronic-stomach
Author
First Published Mar 2, 2017, 1:24 PM IST


தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி,

தனியா (கொத்தமல்லி விதை) – 3 ஸ்பூன்,

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, எள்ளு, மிளகு, நெய் – தலா ஒரு ஸ்பூன்,

மிளகாய் வற்றல் – 2,

புளி – கோலி அளவு,

பெருங்காயம், மஞ்சள் தூள் – சிறிதளவு,

எண்ணெய் – 2 ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் தனியா, கடலைப் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு இவற்றைத் தனித்தனியே வறுத்துப் ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.

* புளியை திக்காகக் கரைத்து கொள்ளவும்.

* அடி கனமாக பாத்திரத்தில் புளி கரைசலை ஊற்றி, கொதித்ததும் அதில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், எள்ளு சேர்த்து, பிறகு அரைத்தப் பொடியைப் போடவும்.

* எல்லாம் கொதித்து வாசனை வந்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் குழம்பில் கொட்டவும்.

* இதைச் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். இதை கல் சட்டியில் செய்தால் இன்னும் சுவை கூடும். மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

பயன்கள்:

தனியா விதை, வாயுப் பிரச்சனை வராமல் தடுக்கும். இதைத் தவிர, இருமல், சளி, தலைவலி, பித்தம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் அருமருந்து.

இதில் தேநீர் தயாரித்தும் அருந்தலாம். மலச்சிக்கலைப் போக்கும். குடலில் தசை இயக்கத்தைத் தூண்டும்.

தாங்க முடியாத வயிற்று வலி, வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

Follow Us:
Download App:
  • android
  • ios