The medical qualities of millet ...
1.. முளைக்கட்டிய கம்பை வறுத்துப் பொடிக்கும்போது, வாசனையும் ருசியும் அதிகரிப்பதோடு எளிதில் ஜீரணமும் ஆகும். எனவே, மலச்சிக்கல் பிரச்னை வராது.
2.. கஞ்சி, அடை மற்றும் தோசை செய்து சாப்பிடலாம்.
3.. மால்டோஸ், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், மங்கனீஸ், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன
4.. புரதம், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின் ஆகியவை மிதமான அளவில் இருக்கின்றன.
5.. கால்சியம், பீட்டா கரோட்டின், குரோமியம் குறைந்த அளவே இருக்கின்றன.
6.. ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம் உடலில் சத்துக்கள் கிரகிக்கப்படும்.
7.. வெல்லப்பாகு காய்ச்சி அதனுடன் கம்பு மாவைக் கலந்து உருண்டை செய்து வளரும் பிள்ளைகளுக்குக் கொடுத்தால், நல்ல சக்தி கிடைக்கும்.
8.. முதியவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் போன்ற அனைவருக்கும் ஏற்றது.
