The fennel is so hungry to eat ...

பிரண்டையை மேல்தோல் கணு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

அதனை புளித்த மோரில் ஒருநாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் மைய இடித்து, வறுத்த மிளகு, சீரகம், எள், ஓமம், மல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும்.

அதனை பட்டாணியளவு மாத்திரைகளாகவோ அல்லது உலர்த்தி, பொடியாகவோ எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் ஒன்று முதல் 2 மாத்திரைகள் அல்லது 1 கிராம் பொடி தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர பசி உண்டாகும்.

சாப்பிட்ட உணவு நன்குச் செரிக்கும்.

கல்லீரல் பலப்படும்.

வயிற்றில் தங்கிய காற்று வெளியேறும்.