Asianet News TamilAsianet News Tamil

இதோ சிலவகை பழங்களும் அவற்றின் மருத்துவ மகத்துவமும்

Some fruits and their medical benefits
some fruits-and-their-medical-benefits
Author
First Published Apr 19, 2017, 2:12 PM IST


1.. செவ்வாழைப்பழம் - கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2. பச்சை வாழைப்பழம் - குளிர்ச்சியை கொடுக்கும்

3. ரஸ்தாளி வாழைப்பழம் - கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4. பேயன் வாழைப்பழம் - வெப்பத்தைக் குறைக்கும்

5. கற்பூர வாழைப்பழம் - கண்ணிற்குக் குளிர்ச்சி

6. நேந்திர வாழைப்பழம் - இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7. ஆப்பிள் பழம் - வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லத

8. நாவல் பழம் - நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்

9. திராட்சை - ஒரு வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்

10. மஞ்சள் வாழைப்பழம் - மலச்சிக்கலைப் போக்கும்

11. மாம்பழம் - மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்

12. கொய்யாப்பழம் - உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.

13. பப்பாளி - மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.

14. செர்ரி திராட்சை - கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios