1.. விளம்பரத்தில் காட்டுகிற மாதிரி பிரஷ் முழுக்க நிறைய பேஸ்ட் வைத்து பல் துலக்க வேண்டியதில்லை.

2. வேர்க்கடலை அளவுக்கு பேஸ்ட் இருந்தாலே போதும்.

3. பேஸ்ட்டானது, பிரஷ்ஷின் உள்ளே இறங்கும்படி, அதன் அமைப்பு இருக்க வேண்டும்.

4. பல் துலக்கி முடித்ததும், விரல் நுனிகளால், ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்து விடலாம்.

5. பற்களை மிதமான அழுத்தம் கொடுத்துத் தேய்த்தால் போதும். ஆக்ரோஷமாக, அதிக அழுத்தத்துடன் தேய்த்தால் எனாமல் பாதிக்கப்படும். எனாமல்தான் பற்களுக்குக் கவசம்.

6. மூன்று மாதங்களுக்கொரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும்

7. வருடம் தவறாத பல் பரிசோதனை, பல் தொடர்பான எந்தப் பிரச்னையும் பெரிதாகாமல், ஆரம்பத்திலேயே சரி செய்யப்பட உதவும்.

8. வருடம் ஒரு முறை அல்லது 2 முறைகள் பற்களை முறையாக சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

9. தினம் 2 முறை பல் துலக்குகிற அடிப்படை சுகாதாரம் அவசியம்.

10. பற்களின் இடையில் ஃபிளாஸ் எனப்படுகிற பிரத்யேக நூல் வைத்து சுத்தம் செய்கிற பழக்கத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

11. சரிவிகித சாப்பாடு அவசியம்.

12. புகைப்பழக்கம் வேண்டாம்.

13. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் என்றால், பல் பரிசோதனையின் போது அதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.