Asianet News TamilAsianet News Tamil

ஊளைச் சதை உடம்பை குறைக்க 7 எளிய வீட்டு மருத்துவ வழிகள்…

remedy for weight loss
remedy for weight loss
Author
First Published Oct 14, 2017, 1:51 PM IST


 

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.

இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது,

வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் அதிகரிக்கும் கொழுப்பு போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது.

இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.

இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்க்க

1.. சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

2.. சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

3.. பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.

4.. அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.

5.. மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

6.. வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

7.. இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மேற்கொண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இருக்கு‌ம்.

Follow Us:
Download App:
  • android
  • ios