Asianet News TamilAsianet News Tamil

இனி குழந்தைகளின் ஐஸ்கிரீம் ஆசைக்கு நோ தடை…

No longer an obstacle to the desire of children ice cream
no longer-an-obstacle-to-the-desire-of-childrens-ice-cr
Author
First Published Mar 6, 2017, 1:20 PM IST


குழந்தைகளின் ஐஸ்கிரீம் ஆசைக்கு தடை போடவே முடியாது. ஆனால், அதற்குபின் வரும் சளி பிரச்சனைகளுக்கும் தயாராக இருக்கனும். இந்த சமயங்களில், இஞ்சி சாறு குழந்தைகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.

இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி, கழுவி, ஆறிய நீர் விட்டு அரைக்கவும். பட்டு போல் இல்லாமல் மிக்சியில், இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும்.

இதை வடிக்கட்டியதும், சாற்றில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

அதிக காரம் நாக்கில் ஏறாமல் இருக்க, பரிசோதனைக்கு பின் தரலாம்.

முன்று நாட்களுக்கு தொடர்ந்து, சிறிதளவு கொடுத்து வந்தால், சளித்தொல்லை பிரச்னை அறவே இருக்காது.

இரண்டு வயதிலிருந்து உள்ள பிள்ளைகளுக்கு இரண்டு ஸ்பூன் அளவுக்கு கொடுக்கலாம்.

இஞ்சி சாறில், தேன் கலந்து சாப்பிடுவது, உடல் நலனுக்கு நல்லது.

பொதுவாக, சளித்தொல்லையால் அவதிப்படுவோர், உணவில் மிளகை சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு டம்ளர் பாலை காய்ச்சி, அதில் முன்று இதழ் குங்குமப்பூ சேர்த்தும் பருகலாம்.

இஞ்சி ரசம், வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

மிளகு பால் காய்ச்சி சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு, இரவில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios