medical facts

1.. கற்றாழை + மஞ்சள் – பால் மாஸ்க்

இந்த மாஸ்க் முகப்பருவால் அதிகம் சிரமப்படுபவர்களுக்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல், மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

2.. கற்றாழை + வெள்ளரிக்காய் மாஸ்க்

இந்த மாஸ்க் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது. இவர்கள் கற்றாழை ஜெல்லுடன் சிறிது வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

3. கற்றாழை + ஓட்ஸ் மாஸ்க்

கற்றாழை ஜெல்லுடன், எலுமிச்சை சாறு மற்றும் ஓட்ஸ் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடு இருக்கும்.

4. கற்றாழை + வேப்பிலை மாஸ்க்

இந்த மாஸ்க் பொலிவிழந்து இருக்கும் சருமத்தினருக்கு ஏற்றது. அதற்கு சிறிது கற்றாழை ஜெல்லுடன், வேப்பிலை சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி, சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.