It is better to bite and drink than guave. Why?

எப்போதும் கிடைக்கும் விலை மலிவான பழங்களில் ஒன்று கொய்யா. அதிலும், 4 ஆப்பிளுக்கு சமமான சத்து ஒரு கொய்யா பழத்தில் இருக்கிறது.

கொய்யாப்பழத்தில் உள்ள சத்துகள்...

கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

கொய்யாவின் மகத்துவங்கள்...

** மழைக்காலத்தில் எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

** பல்முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். 

** கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டைகளில் மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது.

** கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். 

** கொய்யா இலைகள் குடல் புண் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. 

** கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் உள்ளது.

** கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

** மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், கொய்யாப்பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

** கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட, ஒரு பழத்தை அப்படியே கடித்து சாப்பிட்டால், பற்களும் ஈறுகளும் வலுவடையும். வாயை நல்லா சுத்தம் செய்யும்.

** இரத்த சோகை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.